கொரோனா பாதிப்பை குறைந்த செலவில் விரைவில் கண்டறியும் புதிய கருவி இந்தியாவில் கண்டு பிடிப்பு


படம்: ANI
x
படம்: ANI
தினத்தந்தி 24 March 2020 1:54 PM GMT (Updated: 24 March 2020 1:54 PM GMT)

கொரோனா பாதிப்பை குறைந்த செலவில் விரைவில் கண்டறியும் புதிய கருவியை புனேவை சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டு பிடித்து உள்ளது.

புனே

மராட்டிய மாநிலம் புனேவை  மைலேப் டிஸ்கவசு சொலுசன் என்ற நிறுவனம் கொரோனாவுக்கான புதிய பரிசோதனை 

கருவை கண்டறிந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, தேனி, நெல்லை,கோவை,  உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியது.

தமிழகத்திலும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை மற்றும் சென்னை அப்போலோ ஆய்வகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த சோதனைக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாத நிலையில், தனியார் ஆய்வகங்கள் ரூ.4500 கட்டணமாக வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொலுசன் என்ற நிறுவனம் கொரோனா பரிசோதனை கருவியை 

கண்டறிந்துள்ளது. ரூ.80 ஆயிரம் மதிப்பு கொண்ட இந்த  கருவி மூலம் 100 பேரை சோதனை செய்ய முடியும்.

இந்த கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று அனுமதி அளித்துள்ளது. மேலும், மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு கழகமும் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் வணிக ரீதியாக இந்த கருவிகளை அந்நிறுவனம் விற்க முடியும்

வரும் வாரத்தில் ஒரு லட்சத்தில் இருந்து ஒன்றரை லட்சம் பரிசோதனை கருவிகளை தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய கொள்முதல் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவாகும் என்பதால், இந்த சோதனை கருவிகள்  இந்தியாவுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனைக்கருவிக்கு மைலாப் பாத்தோடெக்ட் கோவிட் -19 குவாலிட்டேடிவ் பி.சி.ஆர் கிட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

"மேக் இன் இந்தியா" மற்றும் உள்ளூர் மற்றும் மத்திய அரசின் ஆதரவுடன், கொரோனா சோதனை கருவி உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி தயாரிக்கப்பட்டுள்ளது. இதுமதிப்பீடு செய்யப்பட்டது என மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் எம்.டி ஹஸ்முக் ராவல் கூறினார். 

ரூ.1200-க்கு கொரோனா பரிசோதனையை இந்த கருவி மூலம் மேற்கொள்ள முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய கருவி மூலம் குறைந்த விலையில் அதிகம்பேரைச் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சோதனைகளின் நேரம்7 மணி நேரத்திற்கும் மேலாக ஆகும் என்பதை ஒப்பிடும்போது மைலாபின் டெஸ்ட் கிட் 2.5 மணி நேரத்திற்குள் தொற்றுநோயைக் கண்டறிகிறது.

Next Story