கொரோனாவால் சமூக தொற்று ஏற்பட்டால் கடுமையான சவால்களை சமாளிக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது


கொரோனாவால் சமூக தொற்று ஏற்பட்டால் கடுமையான சவால்களை சமாளிக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது
x
தினத்தந்தி 28 March 2020 1:07 PM GMT (Updated: 28 March 2020 1:07 PM GMT)

கொரோனா வைரஸசால் சமூக தொற்று ஏற்பட்டால் கடுமையான சவால்களை சமாளிக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது என்பதை பார்க்கலாம்.

புதுடெல்லி

கொரோனா வைரஸின் அழிவு உலகிலும் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 854 பேரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று மதிய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.அவர்களில் 47 பேர் வெளிநாட்டினர். 63 பேர் சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவல் கட்டத்தில் நுழையும் என்ற அச்சத்தின் மத்தியில், மாநிலங்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனைகள் , செயற்கை சுவாச கருவிகள் கொள்முதல் செய்தல் மற்றும் ரயில்வே மற்றும் ஆயுதப்படைகளை அணிதிரட்டுதல் போன்ற நடவடிக்கைகளைத் தொடங்குவதன் மூலம் இந்தியா அதன் ஒட்டுமொத்த சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளது.

சமுதாய பரவலுக்கு "உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை" என்று சுகாதார அமைச்சகமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐ.சி.எம்.ஆர்) வலியுறுத்தி வந்தாலும், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க அரசாங்கம் சுகாதார உள்கட்டமைப்பை அளவிடத் தொடங்கியுள்ளது.

கடுமையான சவால்களுக்காக இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது

* கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மட்டுமே மருத்துவமனைகளை ஒதுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது மற்றும் அதிகரித்து வரும் பாதிப்புகளை  நிர்வகிப்பதற்கான அவர்களின் திறனை அதிகரிக்கு உதவி செய்கிறது. குறைந்தது 17 மாநிலங்கள் இதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளன.

* நோய்த்தொற்றுக்கான ஆய்வக சோதனைகளை மேற்கொண்டுள்ள ஐந்து மருத்துவமனைகளைத் தவிர, கொரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 28 சேவை மருத்துவமனைகளை ஆயுதப்படைகள் தயார் நிலையில் வைத்துள்ளன.

* பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் செயற்கை சுவாச கருவிகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது, அதே நேரத்தில் முதன்மை பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் டிஆர்டிஓ மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கிறது மற்றும் நோயாளி பராமரிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு கை சுத்திகரிப்பு மற்றும் முகமூடிகளை வழங்குகிறது.

* பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை அமைப்பதற்கான உபகரணங்களை வாங்குவதற்காக இராணுவப் படைகள் மற்றும்  தளபதிகளுக்கு அரசாங்கம் அவசர நிதி அதிகாரங்களை வழங்கியுள்ளது.

Next Story