தேசிய செய்திகள்

ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி + "||" + There are many soldiers who are fighting #Coronavirus, not from their homes but from outside their homes.

ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி

ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி
ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி  இன்று காலை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றது. 

மக்கள் நம்பிக்கையுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும்.  ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவுக்கு தீர்வு உள்ளது. பயப்பட வேண்டாம். மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வீர வணக்கம். 

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்கு சேவை செய்பவர்கள் ஹீரோக்கள். கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுபாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் புரிகிறது. இந்த சூழலில் வேறு வழியில்லை” என்றார்

தொடர்புடைய செய்திகள்

1. “கோவிஷீல்டு தடுப்பூசி” பணிகளை 28-ம் தேதி ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி
புனேவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பணிகளை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
2. ஒரு நாடு, ஒரு தேர்தல் என்பது விவாதத்திற்குரிய விஷயமல்ல, இது இந்தியாவின் தேவை - பிரதமர் மோடி
இன்றளவும் நாட்டில் மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற சம்பவம் நடக்காமல் பாதுகாத்து வரும் வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி கூறினார்.
3. 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 8 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. ஜி 20 தலைவர்களுடனான ஆலோசனை பயனுள்ள வகையில் இருந்தது: பிரதமர் மோடி டுவிட்
ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு மெய்நிகர் முறையில் இன்று நடைபெற்றது.
5. கொரோனா தடுப்பூசி விவகாரம்: நிபுணர் குழுவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.