துபாய், சவுதியில் இருந்து திரும்பியவர்களை சோதனை செய்யாததால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு


துபாய், சவுதியில் இருந்து திரும்பியவர்களை சோதனை செய்யாததால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 March 2020 6:45 AM GMT (Updated: 30 March 2020 6:45 AM GMT)

துபாய், சவுதி அரேபியாவில் இருந்து திரும்பியவர்களை சோதனை செய்யாததால் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு வழிவகுத்து உள்ளது.

திருவனந்தபுரம்

கொரோனா வைரஸ் பாதிப்பு துபாய், சவுதி அரேபியாவில் இருந்து  திரும்பியவர்கள்  கண்காணிக்கபடாததால்
கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு வழிவகுத்தது.

இந்த நகரத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட வட்டாரங்களில் ஒன்றான நெய்பில் கொரோனா பாதிப்பு குறித்து துபாயின் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை வீட்டுக்கு வீடு சோதனைகளை தொடங்கிய போதுகேரளாவில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் பதட்டத்தை உணர்ந்தனர்.

 கடந்த சில நாட்களில் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்திற்கு திரும்பியவர்களில் கிட்டத்தட்ட 70 சத்வீதம்  பேர் வளைகுடா பெருநகரத்தின் இந்த நெரிசலான வணிக-குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர்கள் ஆவார்கள்.

அவ்வாறு திரும்பி வந்தவர்கள் - கேரளாவில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 39 புதிய பாதிப்புகளில் 34 பேர் ஆவார்.  கசர்கோடு இப்போது “அதிக ஆபத்து” என வகைப்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.தற்போது இந்த மக்கள் மாநிலத்தின் மிகப்பெரிய கவலையாக மாறிவிட்டனர்" என்று தொற்று நோய்களுக்கான கேரள மாநில  அதிகாரி டாக்டர் அமர் ஃபெட்டில் கூறி உள்ளார்.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாத தொடக்கத்தில் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பியவர்களில் பலர் விமான நிலையங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை அல்லது அவர்களை  தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படவில்லை. அப்போது சீனா, தென் கொரியா, ஈரான், ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மீதே கவனம் செலுத்தப்பட்டது. துபாய் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை ரேடாரில் கூட இல்லை. வளைகுடாவிலிருந்து பயணிகளைத் சோதனையிடுவதற்கான் உத்தரவுகள் மார்ச் இரண்டாவது வாரம் வரை வரவில்லை.

இதன் விளைவாக, கடந்த 10 நாட்களில், பல மாநிலங்கள் வளைகுடா நாடுகளில் வாழ்ந்த அல்லது கடத்தப்பட்ட வரலாற்றைக் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகின்றன.

உதாரணமாக, மராட்டிய மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்று துபாய் மற்றும் அபுதாபிக்கு ஆறு நாள் பயணத்திற்குச் சென்ற 40 பேர் கொண்ட குழுவால் வந்தது. "குழுவில் இருந்து குறைந்தது 15 பேர் இதுவரை கொரோனாவால்பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காசர்கோட்டில்  ஒரே நாளில் கேரளாவின் கொரோனா  ஹாட்ஸ்பாட் ஆன பிறகு, பிப்ரவரி 20 க்குப் பிறகு மாவட்டத்திற்கு வந்த 6,511 பேரை மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பில் வைத்தது, அவர்களில் 127 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். “வரும் நாட்களில் தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 215 மாதிரிகளின் முடிவுகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் எதிர்பார்க்கப்படுகின்றன, ”டாக்டர் ஃபெட்டில் கூறி உள்ளார்.

 மத்திய கிழக்கிலிருந்து பயணிகளைத் சோதனையிடுவது மார்ச் மாதத்திற்கு முன்பே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். "இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான தொழில் வல்லுநர்கள் மற்றும் திறமையான தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக வளைகுடாவிற்கு குடிபெயர்கின்றனர். இது மிகவும் பிரபலமான போக்குவரத்து மையங்களில் ஒன்றாகும். அதுவே அதிக ஆபத்துள்ள மண்டலமாக அமைகிறது ”என்று பொது சுகாதார ஆர்வலர் டாக்டர் சுமந்த் ராமன் கூறினார்.

மார்ச் 1 ம் தேதி மும்பையில் வந்து தரையிறங்கிய கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் உட்பட 10 மாவட்டங்களுக்கு கலைந்து சென்ற இந்த பயணிகளின் கிட்டத்தட்ட 300 தொடர்புகளை கேரளா இப்போது கவனித்து வருகிறது.

மராட்டியத்தில் உள்ள கோவிட் -19 நோயாளிகளில் மூன்றில் ஐந்தில் ஒரு பகுதியினர் சர்வதேச பயண வரலாற்றைக் கொண்டுள்ளனர். மராட்டிய மாநில மருத்துவக் கல்வித் துறையின் ஆய்வின்படி, பெரும்பாலான நோயாளிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு பயணம் செய்துள்ளனர். 

குஜராத்தில், பயண வரலாற்றைக் கொண்ட பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகள் துபாய் அல்லது சவுதி அரேபியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். சோதனை செய்த 47 பேரில் 27 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தனர். இவர்களில் ஏழு பேர் துபாயைச் சேர்ந்தவர்கள், எட்டு பேர் சவுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Next Story