நாக்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு நடந்து வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு!


நாக்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு  நடந்து வந்த  நாமக்கல் மாணவர் உயிரிழப்பு!
x
தினத்தந்தி 3 April 2020 3:53 AM GMT (Updated: 3 April 2020 3:53 AM GMT)

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து நண்பர்களுடன் தமிழகத்தை நோக்கி 500 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த மாணவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஐதராபாத்

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி லோகேஷ் (வயது 23). நாக்பூர் அருகே உள்ள வார்தாவில் உணவுப் பதப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உண்ண உணவு கூட கிடைக்காமல் தவித்த அவர் தமது 29 சகாக்களுடன் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டார்.

1300 கிலோமீட்டர் தூரம் உள்ள தமது ஊருக்கு நடந்தே ஊர் திரும்ப லோகேஷ் முடிவெடுத்தார். 9 நாட்களாக நடந்து வந்த அவர்கள் வழியில் கிடைத்த லாரி போன்ற வாகனங்களிலும் சிறிது தூரம் கடந்து வந்தனர்.</p>

ஆனால் ஐதராபாத் அருகே செகந்தராபாத் வந்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது லோகோஷ்-க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story