காசோலையை அயன் செய்து கிருமி நீக்கம் செய்த வங்கி கேசியர்


காசோலையை அயன் செய்து கிருமி நீக்கம் செய்த வங்கி கேசியர்
x
தினத்தந்தி 6 April 2020 11:22 AM GMT (Updated: 6 April 2020 11:22 AM GMT)

காசோலையை அயன் செய்து கிருமி நீக்கம் செய்தார் வங்கி கேசியர் ஒருவர்

அகமதாபாத்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில்  21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.  வங்கிகள் போன்ற பல அத்தியாவசிய சேவைகள்  இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், குஜராத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடாவின் கிளையிலிருந்து ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. வீடியோவில், ஒரு காசோலையை  அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தி காசோலையை கிருமி நீக்கம் செய்வதைக் காணலாம்.

இந்த  வீடியோவை ஆனந்த் மஹிந்திரா என்பவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு நபர் ஒரு காசோலையை ஒரு ஜன்னல் வழியாக காசாளரிடம் கொடுக்கிறார். வங்கி கேசியர் ஒரு இடுக்கியை பயன்படுத்தி காசோலையை வாங்குகிறார். 

பின்னர் அவர் காசோலையை தனது மேஜையில் வைத்து,  அதன் மீது ஒரு நீராவி அயன் பாக்ஸ்-யை வைத்து தேய்கிக்கிறார்.ட் அதில் இருக்கும் வைரஸை கிருமி நீக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதை, ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை  "எனது # வாட்ஸ்அவொண்டர்பாக்ஸில் கேசியரின் தொழில்நுட்பம் பயனுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை என கூறி உள்ளார்.டுவிட்டரில் இது குறித்து பல்வேறுவகையான கருத்துக்கள்தெரிவிக்கப்பட்டு உள்ளது.




Next Story