மேற்குவங்கத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது - முதலமைச்சர் மம்தா பானர்ஜி


மேற்குவங்கத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது - முதலமைச்சர் மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 11 April 2020 12:09 PM GMT (Updated: 11 April 2020 12:21 PM GMT)

மேற்குவங்கத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர, தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல் மந்திரிகள், பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனால், ஊரடங்கை வரும்  30 ஆம் தேதி வரை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 

இதற்கிடையே, ஒடிசா, மராட்டியம் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன. அதேபோல் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக பஞ்சாப் மாநிலம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.  மேலும், ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க பிரதமருக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story