‘மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்’ - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்


‘மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்’ - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
x
தினத்தந்தி 22 April 2020 11:46 PM GMT (Updated: 22 April 2020 11:46 PM GMT)

மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

புதுடெல்லி, 

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இந்த நிலையில், அவர்களுக்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா நோயால் இறந்ததாக கருதப்படும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் உடல்களுக்கு இறுதி சடங்குகள் செய்வதை தடுக்கும் வகையில் சிலர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் சிறப்பு அதிகாரிகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Next Story