இன்ஸ்டாகிராமில் பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி என விவாதித்த மாணவர்கள் மீது வழக்கு


இன்ஸ்டாகிராமில் பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி என விவாதித்த மாணவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 May 2020 3:31 AM GMT (Updated: 6 May 2020 3:31 AM GMT)

இன்ஸ்டாகிராமில் ஒரு குழுவை ஏற்படுத்தி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி என மாணவர்கள் விவாதித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி

கடந்த இரண்டு நாட்களாக  சமூக வலைதளங்களில் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் 'பாய்ஸ் லாக்கர் ரூம் ' என்ற குழு உருவாக்கி அக்குழுவில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் சிறுமிகளின் ஆபாச படங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதுடன் படங்களுக்கு மதிப்பெண்ணும் வழங்கி வந்துள்ளனர்.

மாணவர்கள் அநாகரீகமான கருத்துக்களை கூறுவது, பாலியல் கொடுமை செய்வது பற்றி பேசுவது உள்ளிட்டவை இதன் மூலம் அரங்கேறியுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி மகளீர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், சம்பந்தப்பட்ட சிறுவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர், குறிப்பிட்டுள்ளது இன்ஸ்டாகிராமில் ஒரு குழுவை சில சிறுவர்கள் உருவாக்கியுள்ளனர். அதில் அவர்கள் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், எவ்வாறு பாலியல் வல்லுறவு கொள்வது என்பதை பற்றி விவாதிக்கிறார்கள்.

சில பெண்கள் இந்த குழுவில் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றங்களின் சில ஸ்கிரீன் ஷாட்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர், அதன் பிறகுதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த ஸ்கிரீன் ஷாட்களை சுவாதி மாலிவால், காவல்துறை மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார், உடனடியாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து சுவாதி மாலிவாலின் டிவீட்டுக்குப் பிறகு, டெல்லி போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. சைபர் கிரைம் பிரிவு, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு டி.சி.பி அளித்த அறிக்கையில், "இந்த விவகாரம் குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக 15 வயது மாணவன் ஒருவனை காவலில் எடுத்து விசாரித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Next Story