சிபிஎஸ்இ விடைத்தாள்கள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்படும்: மத்திய அரசு
சிபிஎஸ்இ விடைத்தாள்கள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
சி.பி.எஸ்.இ பள்ளி விடைத்தாள்களை திருத்தும் பணியை மேற்கொள்ள நாடு முழுவதும் 3 ஆயிரம் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் இது குறித்து கூறியிருப்பதாவது:-
“ நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பள்ளி விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக 3 ஆயிரம் பள்ளிகளை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்கள் மூலமாக 1.5 கோடி விடைத்தாள் ஆசிரியர்களின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும். சி.பி.எஸ்.இ விடைத்தாள்கள் திருத்தும் பணி சுமார் 50 நாட்களில் முடிவடையும்” என்றார்.
Related Tags :
Next Story