டெல்லியில் மிதமான நிலநடுக்கம்


டெல்லியில் மிதமான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 10 May 2020 4:23 PM IST (Updated: 10 May 2020 4:23 PM IST)
t-max-icont-min-icon

தலைநகர் டெல்லியில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று பிற்பகல் லேசான நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு டெல்லி, டெல்லி - உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் முறையே 2.7, 3.4 என பதிவாகியுள்ளது.

ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டெல்லி- உ.பி. எல்லைக்கு அருகில் மையம் கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஒரு மாதத்தில் இப்பகுதியில் மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story