பஞ்சாப்பில் பொதுமுடக்கம் மே 31 வரை நீட்டிப்பு - முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவிப்பு


பஞ்சாப்பில் பொதுமுடக்கம் மே 31 வரை நீட்டிப்பு - முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 May 2020 9:48 PM IST (Updated: 16 May 2020 9:48 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாபில் பொது முடக்கம் மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

அமிர்தரஸ்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த பஞ்சாப்பில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் (திங்கள் கிழமை) முடிவுக்கு வருவதாக அம்மாநில  முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். அதேவேளையில், பொதுமுடக்கம் மே  31 வரை நீடிக்கும் என்றும்  அமரீந்தர் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட இருப்பதாகவும், குறைந்த அளவில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படும். எனினும், பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றும் அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story