நூறு நாள் வேலைத்திட்டத்தை மோடி இப்போதாவது புரிந்து கொண்டாரே- ராகுல் காந்தி பாய்ச்சல்


நூறு நாள் வேலைத்திட்டத்தை மோடி இப்போதாவது புரிந்து கொண்டாரே- ராகுல் காந்தி பாய்ச்சல்
x
தினத்தந்தி 19 May 2020 6:28 AM IST (Updated: 19 May 2020 6:28 AM IST)
t-max-icont-min-icon

100-நாள் வேலை திட்டத்தை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

நூறு நாள் வேலை திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பதிவில், ‘‘இப்போதாவது நூறு நாள் வேலைத்திட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு, அதை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளார். 

மேலும், அவர், ‘‘நூறு நாள் வேலைத்திட்டம், காங்கிரசின் தவறுகளுக்கு வாழும் உதாரணம்’’ என்று கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மோடி பேசிய வீடியோ காட்சியையும் இணைத்துள்ளார்.


Next Story