தேசிய செய்திகள்

ஆம்பன் புயலுக்கு 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்; கார்கள் மோதல் + "||" + 3 killed in Storm 2 people injured

ஆம்பன் புயலுக்கு 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்; கார்கள் மோதல்

ஆம்பன் புயலுக்கு 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்; கார்கள் மோதல்
ஆம்பன் புயலால் மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாசில் 5,500 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதுடன் 2 பேர் பலியாகி உள்ளனர்.
வடக்கு 24 பர்கானாஸ்,

தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, இன்று மதியம் 2.30 மணியளவில் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கரையை கடக்க தொடங்கியது.  தொடர்ந்து முன்பகுதி, நடுப்பகுதி பின்னர் கடைசி பகுதி என மாலை 3.30 மணி முதல் 5.30 மணிவரைக்குள் புயல் முழு அளவில் கரையை கடந்தது.

இந்த புயலால், மேற்கு வங்காளத்தில், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட கூடும்.  கொல்கத்தா, ஹூக்ளி, ஹவுரா மற்றும் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் காற்று மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் வீசும்.  இது மணிக்கு 135 கி.மீட்டர் வரை வேகமெடுக்கும் என கூறப்பட்டது.

இந்த புயலானது ஒடிசாவின் பத்ரக் மற்றும் பாலசோர் பகுதிகளில் தொடர்ந்து 2 முதல் 3 மணிநேரம் வரை பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம், தொலைதொடர்பு மற்றும் மின் இணைப்புகளும் பெரிய அளவில் பாதிப்பு அடைய கூடும்.  மரங்கள் வேருடன் சாய கூடும்.  பல பொருட்கள் புயல் காற்றில் பறக்க கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஆம்பன் புயலால் மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாசில் 5,500 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதுடன் 2 பேர் பலியாகி உள்ளனர்.  2 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

கொல்கத்தாவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டன.  கதவுகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.  ஆம்பன் புயலுக்கு வங்காளதேசத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...