தேசிய செய்திகள்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு + "||" + Increasing corona prevalence day by day in Puducherry

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.
புதுச்சேரி

புதுச்சேரி சேர்ந்த 16 பேர், காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவரும், மாஹே பகுதியைச் சேர்ந்த இருவர் என 19 பேரும், கூடுதலாக ஜிப்மரில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரும் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையே, சென்னையிலிருந்து திரும்பிய இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று காலை சுகாதாரத்துறை அறிவித்தது.

இதனால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் இந்நிலையில், புதுச்சேரியில் 9 வயது சிறுவன் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, 4 பேரும் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் இந்நோய்த் தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது

இதனிடையே, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து, இன்று முதல் மீண்டும் எல்லைகள் முடக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து இ-பாஸ் இன்றி வெளிமாநிலத்தில் இருந்தது புதுச்சேரிக்குள் அனுமதிக்கத் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?
உலகிற்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?
2. காசநோய்த் தடுப்பூசி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம்...! ஆய்வில் தகவல்
காசநோயைத் தடுப்பதற்காக போடப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) ஆய்வில் கொரோனா தொற்றை கட்டிப்படுத்தலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
3. அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும்போது மனம் வலிக்கிறது - அமிதாப் பச்சன்
அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும்போது மனம் வலிக்கிறது என அமிதாப் பச்சன் கூறி உள்ளார்.
4. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு குறித்து பரிசீலனை? முக்கிய தகவல்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது - புதுச்சேரி முதலமைச்சர்
புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.