பிரதமர் மோடி, அமித்ஷா சந்திப்பு: ஊரடங்கு நீடிக்கப்படுமா? தளர்த்தப்படுமா? என்பது குறித்து ஆலோசனை


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 29 May 2020 12:04 PM GMT (Updated: 29 May 2020 12:08 PM GMT)

வரும் 31 ஆம் தேதியுடன் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.58 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,531 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 194 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவது குறையவில்லை. நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், வரும் 31 ஆம் தேதியுடன் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்துள்ளார். இதில் ஊரடங்கை தளர்த்துவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்த முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உச்சத்தை எட்டி வரும் நிலையில், மோடி -அமித்ஷா சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 5வது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டால் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story