தேசிய செய்திகள்

டெல்லி தனியார் ஆஸ்பத்திரிகள்கொரோனா சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்க வேண்டும்-மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை + "||" + Panel set up by Amit Shah moots drastic cut in cost of Covid-19 treatment at Delhi’s hospitals

டெல்லி தனியார் ஆஸ்பத்திரிகள்கொரோனா சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்க வேண்டும்-மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை

டெல்லி தனியார் ஆஸ்பத்திரிகள்கொரோனா சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்க வேண்டும்-மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை
டெல்லி தனியார் ஆஸ்பத்திரிகள்கொரோனா சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ளது.

புதுடெல்லி, -

டெல்லியில் தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து வரையறுக்க உயர்மட்டக்குழு ஒன்றை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நியமித்தார். நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான இந்த குழு கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டண விகிதங்களை நேற்று அரசிடம் அளித்து உள்ளது.

அதன்படி தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை பெறுவோரிடம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கலாம். அவசர சிகிச்சை பிரிவுக்கு ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 வரையும், வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சைக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும் வசூலிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது. டெல்லியில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சைக்கு ரூ.24 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. 

இதைப்போல அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு முறையே ரூ.34 ஆயிரம் முதல் ரூ.43 ஆயிரம் வரையும், ரூ.44 ஆயிரம் முதல் ரூ.54 ஆயிரம் வரையும் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மேலும் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லி துணை முதல்வருக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
3. மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்: சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகளை அனுமதிக்க தடை
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகளை அனுமதிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும்-பிரதமர் மோடி சொல்கிறார்
கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.