தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலையை முந்திய டீசல் விலை ! + "||" + Diesel Becomes Costlier Than Petrol In Delhi

நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலையை முந்திய டீசல் விலை !

நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலையை முந்திய டீசல் விலை !
நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் அதிக விலைக்கு டெல்லியில் விற்பனையாகிறது.
புதுடெல்லி,

நாட்டில் தொடர்ந்து 17 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டு வந்த நிலையில், நேற்று  டீசல் விலை மட்டும் உயர்த்தப்பட்டது.  இதன் மூலம் டீசல் விலையானது தொடர்ந்து 18-வது நாள் உயர்வைப் பெற்றது. 

நேற்று  காலை 6 மணி நிலவரப்படி தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் 79.88 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 79.76 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் டெல்லியில் பெட்ரோலைவிட டீசல் விலை உயர்ந்ததாக மாறியுள்ளது. 

அதே நேரத்தில் மற்ற முக்கிய நகரங்களான கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்டவைகளில் பெட்ரோல்தான் டீசலைவிட விலை அதிகமாக இருந்து வருகிறது. 

கடந்த 18 நாட்கள் தொடர் விலையேற்றத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 9.41 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் சுமார் 9.58 ரூபாய் உயர்ந்துள்ளது.  பெட்ரோல் விலையைவிட டீசல் அதிக விலைக்கு விற்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் தடவையாகும்

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மணல் லாரி உரிமையாளர்கள் மாதிரி பட்ஜெட், அல்வா தயாரித்து போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாதிரி பட்ஜெட், அல்வா தயாரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்வு
பெட்ரோல் விலையில், 14-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை. டீசல் விலை 10 காசுகள் உயர்ந்துள்ளது.
3. 13-வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று (ஜுலை10) எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல் விலை 12-வது நாளாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
5. பெட்ரோல், டீசல் விலையில் இன்று(ஜுலை 9) எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றது.

ஆசிரியரின் தேர்வுகள்...