தேசிய செய்திகள்

கவச உடைகள் உற்பத்தி விதிமுறையில் தளர்வு- மத்திய அரசு அறிவிப்பு + "||" + Modi govt to allow PPE, ventilator exports as Indian companies are mass-producing them now

கவச உடைகள் உற்பத்தி விதிமுறையில் தளர்வு- மத்திய அரசு அறிவிப்பு

கவச உடைகள் உற்பத்தி விதிமுறையில் தளர்வு- மத்திய அரசு அறிவிப்பு
கவச உடைகள் உற்பத்தி விதிமுறையில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு முன்வரிசையில் நின்று சிகிச்சை அளிக்கிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் தொற்று பரவாமல் இருப்பதற்காக பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற கவச உடைகள், கருவிகளை அணிந்து கொள்கிறார்கள்.

இவற்றின் உற்பத்திக்கான விதிமுறையை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தரமான கவச உடைகளையும், கருவிகளையும் வினியோகிக்க வசதியாக இந்த தளர்வு செய்யப்பட்டுள்ளது. வடிகட்டியுடன் கூடிய அரை முக கவசங்கள், அறுவைசிகிச்சை முக கவசங்கள், கண் பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றுக்கான உற்பத்தி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அமைப்பான இந்திய தர நிர்ணய பணியகம் கூறுகிறது. 

முன்பு இவற்றை உற்பத்தி செய்வதற்கு உள்சோதனை வசதிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது. இது தளர்த்தப்பட்டுள்ளது. இனி பி.பி.இ. உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்பு மாதிரிகளை இந்திய தர நிர்ணய பணியகம் உரிமம் பெற்ற ஆய்வுக்கூடங்களில் அல்லது அந்த அமைப்பினால் பட்டியலிடப்பட்ட தனியார் அல்லது அரசு ஆய்வுக்கூடங்களில் சோதனை செய்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,218 பேருக்கு கொரோனா தொற்று
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது
2. மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது
மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் புதிய உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
4. கொரோனாவுக்கு சென்னை பூந்தமல்லியில் சிறப்பு எஸ்ஐ உயிரிழப்பு
குன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
5. இதயத்தை பதம் பார்க்கும் கொரோனா வைரஸ் - மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்பு இதயத்தை பதம் பார்க்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.