மத்தியபிரதேசத்தில் வீடு வீடாக கொரோனா பரிசாதனை - முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்


மத்தியபிரதேசத்தில் வீடு வீடாக கொரோனா பரிசாதனை - முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்
x
தினத்தந்தி 28 Jun 2020 2:08 PM GMT (Updated: 28 Jun 2020 2:08 PM GMT)

மத்தியபிரதேசத்தில் வீடு வீடாக கொரோனா பரிசாதனை செய்யப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

போபால்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. 

மத்திய பிரதேசத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை 12,965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 550 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில் மத்தியபிரதேசத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஜூலை 1ம் தேதி முதல் 'கில் கொரோனா' என்ற பிரசாரத்தை தொடங்க உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.  இந்த 'கில் கொரோனா' பிரசாரத்தின் கீழ் வீடு வீடாக கொரோனா சோதனைகளும், கணக்கெடுப்பும் நடத்தப்படும்.

மேலும் 15 நாள் பிரசாரத்தில், தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை என 2.5 லட்சம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும்.  மாநிலத்தில் 76.9 சதவீதம் பேர் குணமடைந்து தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story