தேசிய செய்திகள்

மேற்குவங்காளத்தில் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி + "||" + I am extending free ration for poor till June 2021: West Bengal CM Mamata Banerjee

மேற்குவங்காளத்தில் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

மேற்குவங்காளத்தில் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
மேற்குவங்காளத்தில் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொல்கத்தா,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையில், மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோன வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாகவும் அமல்படுத்தப்பட உள்ள ஊரடங்கில் காலை 5 மணி முதல் 10 மணி வரை சில தளர்வுகள் இருக்கும் என்றும் எஞ்சிய நேரங்களில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி அண்மையில் அறிவித்தார்.

இந்நிலையில் மேற்குவங்காளத்தில் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை எழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

இதையடுத்து ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளாக பொதுமக்கள் காலையில் 5.30 மணி முதல் 8.30 மணி வரை வாக்கிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும்,

திருமண விழாவில் 50 பேர் கலந்து கொள்ளவும், இறுதிச் சடங்கில் 25 பேர் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.