உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 23 பேர் பலி, 29 பேர் காயம்
உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 23 பேர் பலியாகினர்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் 23- பேர் பலியாகினர். 29 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி, “ மின்னல் தாக்கியதில் அலகாபாத் மாவட்டத்தில் 8 பேர், மிர்சாபூரில் 6 பேர், கசாம்பியில் 2 பேர் என மொத்தம் 23 பேர் உயிரிழந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கியதில் பலியான 23 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story