போலீசாரைக் சுட்டுக்கொன்ற உ.பி ரவுடி டெல்லி அருகே பதுங்கல் ! கைது செய்ய போலீசார் தீவிரம்

போலீசாரைக் சுட்டுக்கொன்ற உ.பி ரவுடி டெல்லி அருகே பதுங்கல் ! கைது செய்ய போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 8 July 2020 12:04 PM IST (Updated: 8 July 2020 12:04 PM IST)
t-max-icont-min-icon

ரவுடி விகாஸ் துபே டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி மற்றும் ஏழு காவலர்கள் என எட்டு  போலீசாரை ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 ரவுடி விகாஸ்துபேவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் இந்நிலையில் விகாஸ் துபே சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பதுங்கியிருந்ததது தெரியவந்ததை தொடர்ந்து காவல்துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால், காவல்துறையினர் ஓடட்லுக்கு வருவதற்கு முன்னரே விகாஸ்துபே தப்பி சென்றுள்ளார்.

விகாஸ் துபே அந்த ஓட்டலில் தங்கியிருந்ததற்கான ஆதாரமாக சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து டெல்லி, ஹரியானா, பரிதாபாத் மற்றும் குர்கான் பகுதிகளிலும் காவல்துறையினர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரவுடி விகாஸ் துபே டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர்.

Next Story