மராட்டிய போலீசாரின் கொரோனா பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு


மராட்டிய போலீசாரின் கொரோனா பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு
x
தினத்தந்தி 8 July 2020 7:22 PM IST (Updated: 8 July 2020 7:22 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய காவல் துறையில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 71 ஆக இன்று உயர்வடைந்துள்ளது.

புனே,

நாட்டில் தினமும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது.  இந்தியாவில் இன்று வரை 7.42 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  20,642 பேர் பலியாகி உள்ளனர்.  கடந்த 24 மணிநேரத்தில் 22 ஆயிரத்து 752 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.  482 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது.  தொடர்ந்து தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை உள்ளன.  மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.

மராட்டியத்தில் ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், மராட்டியத்தில் கடந்த 48 மணிநேரத்தில் 278 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இதனால் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்து உள்ளது.  1,113 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இதனையடுத்து, மராட்டிய காவல் துறையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

Next Story