கல்வான் பள்ளத்தாக்கை இந்தியா இழக்கிறதா? - பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி


கல்வான் பள்ளத்தாக்கை இந்தியா இழக்கிறதா? - பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 10 July 2020 2:30 AM IST (Updated: 10 July 2020 1:20 AM IST)
t-max-icont-min-icon

கல்வான் பள்ளத்தாக்கை இந்தியா இழக்கிறதா என பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லி,

லடாக் பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் தொடர்ந்து குறை கூறி வருகிறது.

அந்த கட்சியின் செய்தித் தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.

லடாக் எல்லையில் இந்திய நிலப்பகுதிக்குள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி உருவாக்கப்பட்டு உள்ளதா? எல்லையில் இருந்து நமது படைகள் 2.4 கி.மீ. தூரத்துக்கு வாபஸ் பெறப்பட்டு இருக்கிறதா? ரோந்து பாயிண்ட்-14 விவகாரத்தில் இந்தியா சமரசம் செய்து கொள்கிறதா? கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் உரிமையை நீங்கள் நீர்த்துப்போகச் செய்கிறீர்களா? ஆகிய கேள்விகளை எழுப்பி, இவற்றுக்கு பதில் அளிக்குமாறு பிரதமரை ரன்தீப் சுர்ஜேவாலா கேட்டுக் கொண்டு உள்ளார்.


Next Story