ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி பூங்கா: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்


ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி பூங்கா: பிரதமர் மோடி   நாட்டுக்கு அர்ப்பணித்தார்
x
தினத்தந்தி 10 July 2020 11:24 AM IST (Updated: 10 July 2020 11:24 AM IST)
t-max-icont-min-icon

ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ரேவா,

நாட்டில் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு வேண்டிய மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இவற்றில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 750 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்திட்டம் ஒன்றை பிரதமர் மோடி  இன்று, காணொலி காட்சி வாயிலாக  நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. 1,500 ஹெக்டேர் பரப்பளவில் இந்த சோலார் மின் சக்தி பூங்கா  அமைக்கப்பட்டுள்ளது. 

Next Story