இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி


இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 11 July 2020 11:13 PM IST (Updated: 11 July 2020 11:30 PM IST)
t-max-icont-min-icon

இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அமிதாப்பச்சன் தனது டுவிட்டரில், “நான் கொரோனா பரிசோதனை செய்தேன் .. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் .. மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளது .. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் .. கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவு செய்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

அமிதாப் பச்சன் கடைசியாக ஷூஜித் சிர்காரின் நகைச்சுவை-படமான குலாபோ சித்தாபோவில் ஆயுஷ்மான் குர்ரானாவுடன் நடித்தார். இந்த படம் ஆரம்பத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படவிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இது அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்பட்டது.



Next Story