டெல்லியில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 3,487 ஆக உயர்வு
டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,487 ஆக இன்று உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் ஜூலை 15ந்தேதி வரை 2.25 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், டெல்லியில் இன்று 1.15 லட்சம் பாதிப்புகளே பதிவாகி இருந்தன. மத்திய அரசு, என்.ஜி.ஓ.க்கள் மற்றும் மத அமைப்புகள் அளித்த உதவியால் இந்த நிலை சாத்தியப்பட்டது என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது கூறினார்.
இதற்காக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றும் கூறினார்.
டெல்லியில் இன்று 1,647 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை, 1,16,993 ஆக உயர்ந்து உள்ளது. 41 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,487 ஆக உள்ளது. 95,699 பேர் குணமடைந்தும், 17,807 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
டெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 659 ஆக உள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 9,943 ஆக உள்ளது. இதுவரை 7 லட்சத்து 36 ஆயிரத்து 436 பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த பரிசோதனை 10 லட்சத்தில் 38,759 என்ற எண்ணிக்கையிலானது ஆகும்.
Related Tags :
Next Story