கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் குறைவு - பிரதமர் மோடி


கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் குறைவு - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 27 July 2020 12:27 PM GMT (Updated: 27 July 2020 12:27 PM GMT)

கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் குறைவாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

மும்பை, கொல்கத்தா, நொய்டாவில்அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள்பிரதமர் மோடி இன்று தொடங்கி  வைத்தார். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் மாதிரிகள் வரை இந்த மையங்கள் மூலம் பரிசோதனை செய்ய முடியும்.  

இந்த மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- “ சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் மற்ற நாடுகளை விட  இந்தியாவில்  கொரோனா பாதிப்பு  குறைவாக உள்ளது.  கொரோனா  உயிரிழப்பு விகிதமும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவாக உள்ளது.

உலகளாவிய தொற்றான கொரோனாவை இந்தியர்கள் தைரியத்துடன் எதிர்த்து போராடி வருகின்றனர். நாட்டில் கொரோனா சிகிச்சைக்காக 11 லட்சத்திற்கும்  மேல் படுக்கைகள்  உள்ளன. நாட்டில் 1,300  கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 5 லட்சம் பரிசோதனைகளுக்கும் மேல் செய்யப்பட்டு வருகின்றன” என்றார். 

Next Story