தேசிய கல்விக் கொள்கை: பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் - பிரதமர் மோடி


தேசிய கல்விக் கொள்கை: பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 29 July 2020 2:47 PM GMT (Updated: 29 July 2020 2:47 PM GMT)

தேசிய கல்வி கொள்கை பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தற்போது அமலில் இருக்கும் கல்விக் கொள்கை 1968-ல் உருவாக்கப்பட்டு, 1992-ல் திருத்தப்பட்டது. தற்போதைய புதிய கல்விக் கொள்கை 2014 தேர்தலில் பாஜகவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது.

இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை முன்வரைவின் முழுமையான அறிக்கையை, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக் குழு, கடந்த ஆண்டு மே 31-ம் தேதி சமர்ப்பித்தது.

இந்தநிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

* உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் 2035 க்குள் 50% மொத்த சேர்க்கை இலக்கு நிர்ணயம்.

* பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்

* உயர்கல்வியில் எம்.பில். ரத்து செய்யப்படுகிறது

* பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்

* 12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி

* தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கல்விசார் படிப்புகள் இணையவழியில் தொடங்கப்படும்.

* தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணங்கள் வெளிப்படையாகவும் முழுமையாகவும் வெளியிடப்படும்

* கல்விக் கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது.

* 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்தவே புதிய கல்விக் கொள்கை

* நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும்

* கல்விக் கட்டணங்கள் குறித்து புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அனைவருக்குமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்

* தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கும், இலக்கியப் படைப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கப்படும்.

* தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விரிவாக்கப்பட்டு சமூக அறிவியல் கள ஆய்வுகளுக்கு அனுமதி

* கல்வித் துறைக்கான புதிய ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பு தரும்

* கல்வித் துறையில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.

* புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்; என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும்.

* பள்ளி, மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருத மொழி, ஒரு விருப்ப மொழியாக இருக்கும்.

* சமஸ்கிருதம் மட்டுமல்லாமல், இதர தொன்மை வாய்ந்த மொழிகளும் வழங்கப்படும்   என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.

* 6ஆம் வகுப்பு முதல் தொழில்முறைக் கல்விகளின் அடிப்படைகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.

* உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்

*  நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்க நடவடிக்கை.

* பாடத்திட்டங்களின் சுமைகளை குறைப்பதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம்

* தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு தர நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

* எம்.பில் படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையின்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

* 8ஆம் வகுப்பு வரை தாய் மொழிக்கல்வியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியதாவது:

தேசிய கல்வி கொள்கை 2020 இன் ஒப்புதலை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். இது கல்வித்துறையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தமாகும்.  பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என பதிவிட்டுள்ளார்.


Next Story