தேசிய செய்திகள்

பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது: 49 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிப்பு + "||" + More Than 45 Lakh People Affected In Bihar Floods

பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது: 49 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிப்பு

பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது: 49 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிப்பு
பீகாரில் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், 49 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
பாட்னா,

பீகார் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில வாரங்களாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாநிலத்தில் பாயும் பல ஆறுகளில் அபாய அளவுக்கும் மேலாக வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

நேபாளத்தில் உற்பத்தியாகி பீகாரின் வடமாவட்டங்களை கடந்து செல்லும்  நதிக​ளில் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளது. 29 தேசிய, மாநில பேரிட​ர் அமைப்பை சேர்ந்த குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பீகாரில் இதுவரை, சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.  கொரோனா சூழல் காரணமாக வெறும் 26,732 பேர்கள் மட்டுமே 19 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மற்றவர்களுக்கு சமூக சமையற்கூடம் மூலமாக உணவு சமைத்து விநியோகித்து வருகின்றனர்.