கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி; மருத்துவமனையில் அனுமதி


கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி; மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 2 Aug 2020 6:28 PM GMT (Updated: 2 Aug 2020 6:28 PM GMT)

கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் 5,532 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,34,819 ஆக அதிகரித்துள்ளது.  கர்நாடகாவில் 84 பேர் கொரோனாவால் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,496 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 4,077 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,725 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது 74,590 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  எனினும் நான் நலமுடனே இருக்கிறேன்.

நான், மருத்துவர்கள் அளித்த பரிந்துரையின்படி முன்னெச்சரிக்கைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன்.  சமீபத்தில் என்னை தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.  அவர்கள் சுய தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

Next Story