கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று


கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 4 Aug 2020 2:53 AM GMT (Updated: 4 Aug 2020 2:53 AM GMT)

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள சித்தராமையா, “ எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைப்படி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட உள்ளேன்.  அண்மையில் என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படுகிறதா? என கவனியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story