ராமர் கோவிலுக்கு அடிக்கல்: “தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார நிகழ்வு” - பிரியங்கா காந்தி


ராமர் கோவிலுக்கு அடிக்கல்: “தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார நிகழ்வு” - பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 4 Aug 2020 9:22 AM GMT (Updated: 4 Aug 2020 9:22 AM GMT)

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவது தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியான நிகழ்வு என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவது தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியான நிகழ்வாக உள்ளது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “ எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம். ராம் எல்லோரிடமும் இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “ராமர் மற்றும் தாய் சீதையின் அருள் உரை மற்றும் அருளால், ராம்லாலா கோயிலின் பூமிபூஜை விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியான ஒரு நிகழ்வாக மாறி உள்ளது” என்று தனது டுவிட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ளார். 

Next Story