ராமர் கோவிலுக்கு பூமி பூஜை: அயோத்தியில் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை


ராமர் கோவிலுக்கு பூமி பூஜை: அயோத்தியில் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை
x
தினத்தந்தி 5 Aug 2020 2:44 AM GMT (Updated: 5 Aug 2020 2:44 AM GMT)

அயோத்தியில் இன்று (புதன்கிழமை) ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டுதலும் நடக்கிறது.

அயோத்தி,

அயோத்தியில் இன்று (புதன்கிழமை) ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டுதலும் நடக்கிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த விழாவுக்கு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்வுகளையொட்டி கொரோனா மற்றும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்காக அயோத்தியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. நகருக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீசார் தடைகள் வைத்து அடைத்து உள்ளனர். அண்டை மாவட்டமான பாரபங்கி எல்லையில் இருந்தே சோதனைகள் நடந்து வருகின்றன.

அயோத்தி நகரில் உள்ளூர்வாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக அவர்களது அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். விழா நடைபெறும் அயோத்தி நகரம் உள்பட மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அயோத்தி நகரில் பெரும்பாலான கடைகள் மற்றும் சந்தைகள் திறந்தே இருக்கின்றன. எனினும் கொரோனா தடுப்புக்காக கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அயோத்தியில் கோவில்கள், மசூதிகள் திறந்திருந்தாலும் இன்று வேறு எந்த மதச்சடங்குகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story