கன்னியாஸ்திரி பாலியல் வன்முறை விவகாரம்; தன்னை விடுவிக்க கோரிய பிஷப்பின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


கன்னியாஸ்திரி பாலியல் வன்முறை விவகாரம்; தன்னை விடுவிக்க கோரிய பிஷப்பின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 6 Aug 2020 4:40 AM GMT (Updated: 6 Aug 2020 4:40 AM GMT)

கன்னியாஸ்திரி பாலியல் வன்முறை விவகாரத்தில் தன்னை விடுவிக்க கோரிய பி ஷப்பின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

கேரள மாநிலம் கோட்டயம் அருகே குருவிலாங்காடில் கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி ரோமன் கத்தோலிக் டயோசிஸ் ஆப் ஜலந்தரின் பி ஷப் பிராங்கோ முலக்கல் பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டயம் மாவட்ட போலீசில் கன்னியாஸ்திரி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதில், ‘‘முதன் முதலாக 2014-ம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடில் உள்ள விருந்தினர் மாளிகையில் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பி ஷப் பிராங்கோ, தொடர்ந்து இதே போல மிரட்டி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்தார். தேவாலய நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் போலீசில் புகார் கொடுக்கிறேன்’’ என கூறி இருந்தார்.

இதுபற்றி கோட்டயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பி ஷப் பிராங்கோ முலக்கல்லை கைது செய்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பி ஷப் பிராங்கோ முலக்கல் தாக்கல் செய்த மனுக்கள் கீழ்க்கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பி ஷப் முலக்கல், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஏற்கத்தகுந்தது அல்ல என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story