தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல்: பிரதமர் பொய் சொல்வதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு + "||" + Chinese military encroach on Ladakh border Rahul Gandhi accuses Prime Minister of lying

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல்: பிரதமர் பொய் சொல்வதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல்: பிரதமர் பொய் சொல்வதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் பிரதமர் பொய் சொல்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி, 

லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், அக்கட்சியின் மற்ற தலைவர்களும் தொடர்ந்து குறை கூறி வருகிறார்கள். இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்துவிட்டதாகவும், ஆனால் பிரதமர் மோடி இதை ஒப்புக்கொள்ள மறுப்பதோடு, மறைப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ராணுவ அமைச்சக தகவல்களை மேற்கோள் காட்டி லடாக் எல்லையில் குக்ராங் நலா, கோக்ரா, பங்கோங் சோ ஏரியின் வடக்கு கரை பகுதிகளில் கடந்த மே 17 மற்றும் 18-ந் தேதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததாக ஒரு பத்திரிகையில் வெளியான தகவலை இணைத்து உள்ளார். அத்துடன், சீனாவின் அத்துமீறலை ராணுவ அமைச்சகம் ஒப்புக் கொள்ளும் போது பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. லடாக் யூனியன் பிரதேசம் "இந்தியா சட்டவிரோதமாக நிறுவிய ஒரு பகுதி- சீனா மீண்டும் பிடிவாதம்
சீன வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் லடாக் யூனியன் பிரதேசம் "இந்தியா சட்டவிரோதமாக நிறுவிய ஒரு பகுதி" என்று கூறியுள்ளது.
2. லடாக்கில் 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்கள்
லடாக்கின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள 6 புதிய சிகரங்களை இந்திய ராணுவ வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
3. லடாக் பகுதியில் சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை கையாளும் சீனா
லடாக் பகுதியில் எதிரியை சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை இந்திய வீரர்களுக்கு எதிராக கையாள தொடங்கி உள்ள சீன ராணுவம்
4. லடாக் எல்லை பதற்றத்திற்கு மத்தியில், உத்தரகாண்ட் எல்லைக்கு அருகே சீன கட்டுமானங்கள் கண்டறியப்பட்டது
லடாக் எல்லை பதற்றத்திற்கு மத்தியில், உத்தரகாண்ட் எல்லைக்கு அருகே சீன கட்டுமானங்கள் மேற்கொளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
5. லடாக் எல்லையில் பதற்றம் நீடிப்பு: சீனா, அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்கும்
லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீனா அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.