கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - பினராயி விஜயன்


கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் -  பினராயி விஜயன்
x
தினத்தந்தி 7 Aug 2020 2:47 PM GMT (Updated: 7 Aug 2020 2:47 PM GMT)

கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில்  மூணாறு அருகே ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிய தேயிலை தோட்ட தொழிலாளர்களில், 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில், காந்திராஜ் (48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாதுரை (44), ராஜேஸ்வரி (43) ஆகிய 9 பேரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 52 பேர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையால் மீட்பு பணிகளில் தொய்வு  ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களின் முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் மாநில காவல்துறையும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். இரவிலும் மீட்பு பணிகளை தொடர்ந்து தொய்வின்றி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story