மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அரசு அரவணைக்கும் - பினராயி விஜயன்


மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அரசு அரவணைக்கும் - பினராயி விஜயன்
x
தினத்தந்தி 8 Aug 2020 4:27 PM GMT (Updated: 8 Aug 2020 4:27 PM GMT)

மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அரசு அரவணைக்கும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அரசு அரவணைக்கும். நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளித்த நிவாரண நிதி முதற்கட்டமானது தான் என்றும், மீட்புப்பணி முடிந்ததும் இழப்புகளை மதிப்பிட்டு பாதிக்கப்பட்டோருக்கு அடுத்தகட்ட உதவிகள் வழங்கப்படும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

விமான விபத்து பலி, நிலச்சரிவு மரணத்திற்கு நிவாரணம் தந்ததில் பாகுபாடு என்ற விமர்சனத்திற்கு பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார்.


Next Story