தேசிய செய்திகள்

கேரள விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona damage confirmed for one person killed in Kerala plane crash

கேரள விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரள விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கோழிக்கோடு விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோழிக்கோடு,

கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து வந்திறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.  இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்தன.  காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கோழிக்கோடு விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கெரோனா உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் உள்பட பலர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். துபாயில் இருந்து புறப்படும் முன்பு பல பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் விமானத்தில் வந்துள்ளனர். பலர் பரிசோதனை செய்யாமல் வந்துள்ளனர். எனவே சிகிச்சை பெறுபவர்கள் தனிவார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது
புதுச்சேரியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 500-ஐ நெருங்கிவிட்டது.
2. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,052 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சம் என்ற அளவை கடந்துள்ளது.
3. புதுச்சேரியில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; ஜிப்மர் மருத்துவமனை ஆய்வில் தகவல்
புதுச்சேரியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4. டெல்லி திகார் சிறை பொது இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லியில் உள்ள திகார் சிறை பொது இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,508 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,508 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.