நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு
x
தினத்தந்தி 18 Aug 2020 3:58 AM GMT (Updated: 18 Aug 2020 3:58 AM GMT)

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது குறித்து  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் ஆலோசனை நடத்தினர்.

இதன்படி நாடாளுமன்ற இரு அவைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகளை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்றன. உறுப்பினர்களுக்கு அவை அலுவல் தெரியும் வகையில் 4 பெரிய திரைகளும் 6 சிறிய திரைகளும் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்கும் என்றும், 7 முதல் 8 நாட்கள் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டத்தொடரில் 11 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story