கோவா மாநில கவர்னர் சத்யபால் மாலிக் மேகாலயாவுக்கு மாற்றம்


கோவா மாநில கவர்னர் சத்யபால் மாலிக் மேகாலயாவுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 19 Aug 2020 12:53 AM IST (Updated: 19 Aug 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

கோவா மாநில கவர்னர் சத்யபால் மாலிக் மேகாலயாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்பு, அதன் கடைசி கவர்னராக இருந்த சத்யபால் மாலிக், கடந்த ஆண்டு கோவா மாநில கவர்னராக மாற்றப்பட்டார். இந்நிலையில் மேகாலயா கவர்னர் ததகதா ராயின் பதவிக்காலம் முடிவடைந்ததால், சத்யபால் மாலிக் மேகாலயா மாநில கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். இந்த தகவலை ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

அத்துடன், மராட்டிய மாநில கவர்னர் பகத்சிங் கோஷியாரி, கோவா மாநில கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவித்துள்ளது. சத்யபால் மாலிக், மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ததகதா ராய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Next Story