தேசிய செய்திகள்

4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழப்பு - ராகுல்காந்தி டுவீட் + "||" + Rahul: 2 crore jobs lost in last 4 months

4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழப்பு - ராகுல்காந்தி டுவீட்

4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழப்பு - ராகுல்காந்தி டுவீட்
4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு அறிக்கையில், 'லாக்-டவுன் காரணமாக ஏப்ரல்-ஜூலையில் சம்பள ஊழியர்கள் ஒரு கோடியே 89 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 77 லட்சம் பேருக்கும் கூடுதலாக மே மாதத்தில் 1 லட்சம் பேருக்கும் ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கும் ஜூலையில் 50 லட்சம் பேருக்கும் பணியிழப்பு ஏற்பட்டுள்ளது.


ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 12 கோடியே 15 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டதில், சிறு வணிகர்கள், தினக்கூலிகள், தெருவில் கூவி விற்பவர்களில் 9 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது எனத் தெரிவித்திருந்தது.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்து நாளேடுகளில் வந்த செய்தியை தனது ட்விட்டர் பதிவில் இணைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாடுமுழுவதும் கடந்த 4 மாதங்களில் ஏறக்குறைய 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர்.

2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் மூழ்கி உள்ளது. வேலையின்மை, பொருளாதார சீரழிவின் உண்மையை இந்திய மக்களிடம் இருந்து மறைக்க முடியாது.  பேஸ்புக்கில் போலி செய்திகளையும், வெறுப்புகளையம் பரப்புவதன் மூலம், உண்மையை மக்களிடம் இருந்து மறைக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல்காந்தி ஒரு ‘வி.ஐ.பி. விவசாயி’ - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சனம்
ராகுல்காந்தி ஒரு வி.ஐ.பி. விவசாயி என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சித்து உள்ளார்.
2. பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் பெண்களுக்கே அறிவுரை சொல்வார்களா? ராகுல்காந்தி கொதிப்பு
'மகள்களுக்கு பெற்றோர்கள் நல்ல பண்புகள் மற்றும் கலாசாரத்தை சொல்லி தந்து வளர்த்தால் தான் பலாத்காரம் தடுக்கப்படும்' என பாஜக எம்.எல்.ஏ., கூறிய கருத்துக்கு ராகுல்காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
3. உலகின் எந்த சக்தியும் குடும்பத்தின் குரலை அடக்க முடியாது - ராகுல்காந்தி பேட்டி
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தின் குரலை உலகின் எந்த சக்தியும் அடக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4. யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்; அநீதியான செயலுக்கும் தலைவணங்க மாட்டேன்- ராகுல்காந்தி
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதிக்கு ராகுல் காந்தி மீண்டும் செல்கிறார். ஏற்கனவே ஹத்ராஸ் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் மீண்டும் பயணம் மேற்கொள்கிறார்.
5. பிரதமர் மயில்களுடன் பிஸி நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் - ராகுல்காந்தி கிண்டல்
மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்