தேசிய செய்திகள்

மாணவர்கள், தேர்வு குறித்து ஆலோசிக்க விரும்புகின்றனர், பிரதமர் பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார் - ராகுல்காந்தி விமர்சனம் + "||" + JEE-NEET aspirants wanted the PM do Pariksha Pe Charcha but the PM did Khilone Pe Charcha Rahul Gandhi

மாணவர்கள், தேர்வு குறித்து ஆலோசிக்க விரும்புகின்றனர், பிரதமர் பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார் - ராகுல்காந்தி விமர்சனம்

மாணவர்கள், தேர்வு குறித்து ஆலோசிக்க விரும்புகின்றனர், பிரதமர் பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார் - ராகுல்காந்தி விமர்சனம்
நீட் ஜேஇஇ தேர்வு குறித்து ஆலோசிக்க மாணவர்கள் விரும்புகின்றனர். ஆனால்,பொம்மை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்குவதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,

மான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது. தமிழகத்தில் பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது. கடந்த காலத்தை நினைவூட்டுவதும், எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள். இந்தியாவில் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருட்கள் ஒற்றுமையை பறைசாற்றுகிறது.


விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்வி கொள்கையில் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய வேண்டும். உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்கவிக்க வேண்டும் என பேசினார்.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஜேஇஇ - நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தேர்வு குறித்து ஆலோசிக்க விரும்புகின்றனர். ஆனால், பிரதமர் பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல்காந்தி ஒரு ‘வி.ஐ.பி. விவசாயி’ - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சனம்
ராகுல்காந்தி ஒரு வி.ஐ.பி. விவசாயி என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சித்து உள்ளார்.
2. பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் பெண்களுக்கே அறிவுரை சொல்வார்களா? ராகுல்காந்தி கொதிப்பு
'மகள்களுக்கு பெற்றோர்கள் நல்ல பண்புகள் மற்றும் கலாசாரத்தை சொல்லி தந்து வளர்த்தால் தான் பலாத்காரம் தடுக்கப்படும்' என பாஜக எம்.எல்.ஏ., கூறிய கருத்துக்கு ராகுல்காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
3. உலகின் எந்த சக்தியும் குடும்பத்தின் குரலை அடக்க முடியாது - ராகுல்காந்தி பேட்டி
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தின் குரலை உலகின் எந்த சக்தியும் அடக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4. யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்; அநீதியான செயலுக்கும் தலைவணங்க மாட்டேன்- ராகுல்காந்தி
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதிக்கு ராகுல் காந்தி மீண்டும் செல்கிறார். ஏற்கனவே ஹத்ராஸ் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் மீண்டும் பயணம் மேற்கொள்கிறார்.
5. பிரதமர் மயில்களுடன் பிஸி நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் - ராகுல்காந்தி கிண்டல்
மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்