தேசிய செய்திகள்

நாய் பராமரிப்பு வேலைக்கு பட்டதாரிகளை அழைத்த ஐ.ஐ.டி.-எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெற்றது + "||" + BTech for dog handler position: IIT Delhi clarifies after job posting goes viral

நாய் பராமரிப்பு வேலைக்கு பட்டதாரிகளை அழைத்த ஐ.ஐ.டி.-எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெற்றது

நாய் பராமரிப்பு வேலைக்கு பட்டதாரிகளை அழைத்த ஐ.ஐ.டி.-எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெற்றது
எதிர்ப்பு வலுத்ததால் ஐ.ஐ.டி. நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்ததுடன், அந்த விளம்பர அறிவிப்பை திரும்ப பெறுவதாக கூறி இருக்கிறது.
புதுடெல்லி, 

புதுடெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையம் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி ஒரு வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில் பி.ஏ., பி.எஸ்சி, பி.காம், பி.டெக் மற்றும் அதற்கு இணையான பட்டப்படிப்பு படித்தவர்கள், நாய் பராமரிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதுடன், வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளை நாய் பராமரிக்க அழைப்பதாக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. எதிர்ப்பு வலுத்ததால் ஐ.ஐ.டி. நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்ததுடன், அந்த விளம்பர அறிவிப்பை திரும்ப பெறுவதாக கூறி இருக்கிறது.

‘‘நாய் பராமரிப்பாளர் பணியானது, இளநிலை கால்நடை அறிவியல் படிப்பு படித்தவர்களுக்கானது. ஆனால் வெளியான அறிவிப்பில், வேறு ஒரு பணி அறிவிப்புக்கான இளநிலை பட்டப்படிப்பு தகுதிகள் தவறுதலாக நகல் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுவிட்டது.

 ஐ.ஐ.டி. வளாகத்திற்கு கொண்டுவரப்படும் தெருநாய்களை பராமரித்தல், தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ‘நாய் பராமரிப்பாளர்’ பணியிடங்கள் நிரப்பப்படும். தவறான அறிவிப்பு திரும்ப பெறப்பட்டு, இதற்காக வேறு புதிய அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்று ஐ.ஐ.டி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் பனிபோல் படர்ந்த புகை - பொதுமக்கள் அவதி
டெல்லியில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு காற்று மாசு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
2. டெல்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய நான்கு காஷ்மீர் இளைஞர்கள் கைது - காவல்துறை
டெல்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய நான்கு காஷ்மீர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3. டெல்லி துணை முதல்வருக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
4. வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
5. மாஸ்க், ஸ்மார்ட் கார்டு கட்டாயம்: டெல்லி மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
5 மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை துவங்க உள்ளது.