தேசிய செய்திகள்

மத்திய அரசு ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்காதது பாவம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே + "||" + Central government G.S.T. It is a sin not to pay the outstanding amount First-Minister Uddhav Thackeray

மத்திய அரசு ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்காதது பாவம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே

மத்திய அரசு ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்காதது பாவம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
மத்திய அரசு ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்காதது பாவம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கி உள்ளார்.
மும்பை, 

மராட்டிய அரசு மேற்கொண்ட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் நடந்த மேல்-சபை கூட்டத்தில் பட்டியலிட்டார்.

அப்போது ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை மராட்டியத்துக்கு கொடுக்காத மத்திய அரசையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:-

மராட்டியத்தில் வெறும் 3 ஆக இருந்த கொரோனா பரிசோதனை மையத்தின் எண்ணிக்கை 525 ஆக உயர்த்தப்பட்டன. மேலும் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 7 ஆயிரத்து 722-ல் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

மேலும் சீனாவில் 15 நாட்களில் உருவாக்கப்பட்ட அவசர கால மருத்துவமனை போல, நாங்களும் 15-20 நாட்களுக்குள் சிறப்பு மருத்துவமனை அமைத்தோம். மத்திய அரசு சார்பில் ஆகஸ்ட் 15-ந் தேதி தடுப்பூசி வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் தேதி கடந்துவிட்டது. புதிய தேதி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேபோல இதுவரை மத்திய அரசு மராட்டியத்திற்கு தரவேண்டிய சுமார் ரூ.22 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்கவில்லை. உரிய தொகையை வழங்குவதற்கு பதிலாக நம்மை கடன் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்துகிறது. இது ஒரு பாவச்செயலாகும்.

எனவே மராட்டிய எதிர்க்கட்சிகள் நமக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. தொகையை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் ஒருமித்த குரலில் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை கண்டித்து கோவை மாவட்டத்தில் 14 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை கண்டித்து கோவை மாவட்டத்தில் 14 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
2. மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களே நியமிக்கப்படுவர் என அறிவிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களே நியமிக்கப்படுவர் என அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3. பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும்- காங்கிரஸ்
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
4. டெல்லியில் டிராக்டரை எரித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; பாஜக கடும் விமர்சனம்
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி இந்தியா கேட் பகுதியில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு 32 எம்.பிக்கள் கடிதம்
இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு 32 எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.