தேசிய செய்திகள்

கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இன்று மேலும் 2,988 பேருக்கு தொற்று + "||" + 14 deaths and 2,988 fresh COVID19 cases reported in the state today.Kerala Government

கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இன்று மேலும் 2,988 பேருக்கு தொற்று

கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இன்று மேலும் 2,988 பேருக்கு தொற்று
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 2,988 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

இந்நிலையில் கேரளாவில் இன்று 3 ஆயிரத்தை நெருங்கி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று 2,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,02,191 ஆகும். 

கொரோனா பாதிப்புக்கு இன்று 14 பேர் உயிரிழந்துள்ளநிலையில், இதுவரை 410 பேர் பலியாகி உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,657 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 73,904 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 27,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
2. கேரளாவில் இன்று 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
4. கேரளா: வயநாட்டில் இன்று நடைபெறும் கொரோனா ஆய்வு கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு
3 நாள் பயணமாக கேரளாவுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
5. கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு நெருக்கடி- எந்த நேரமும் கைதாகலாம் என பரபரப்பு தகவல்
கேரள தங்கம் கடத்தல் வழக்கில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரை சுங்கத்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.