நடிகை கங்கனா ரணாவத் பங்களா இடிப்பில் அரசுக்கு தொடர்பு இல்லை - சரத்பவார் சொல்கிறார்
நடிகை கங்கனா ரணாவத் பங்களா இடிப்பில் அரசுக்கு தொடர்பு இல்லை என்று சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் கூறினார்.
மும்பை,
மும்பை நகரை பற்றி சர்ச்சை கருத்தை கூறி ஆளும் கட்சியினருடன் மோதலில் ஈடுபட்டதை தொடர்ந்து பாந்திராவில் உள்ள நடிகை கங்கனா ரணாவத் பங்களாவின் பல பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டவை எனக்கூறி மாநகராட்சி இடித்து தள்ளியது.
இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மராட்டிய ஆளும் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், “ நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களாவில் உள்ள சட்டவிரோத இடிப்பில் ஈடுபட்டது மும்பை மாநகராட்சி தான். இடிப்பு சம்பவத்துக்கும், மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை ” என்றார்.
Related Tags :
Next Story