தேசிய செய்திகள்

கூகுள் ப்ளே ஸ்டோரில் “பேடிஎம்” செயலி மீண்டும் சேர்ப்பு + "||" + Thanks everyone for your support! Paytm App is back, live in Play Store Vijay Shekhar Sharma

கூகுள் ப்ளே ஸ்டோரில் “பேடிஎம்” செயலி மீண்டும் சேர்ப்பு

கூகுள் ப்ளே ஸ்டோரில் “பேடிஎம்” செயலி மீண்டும் சேர்ப்பு
கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் அப்ளிகேசன் நீக்கப்பட்டநிலையில் தற்போது மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் பேடிஎம் சேர்க்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

இணைய வழி பணப்பரிமாற்றம், ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்டவற்றிற்காக பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு செயலியான “பேடிஎம்” (Paytm) விதிமீறல் காரணங்களுக்காக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தலைமையகமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பேடிஎம் அப்ளிகேசன் பல மில்லியன் மக்களால் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் கூகிள் சட்டத்திட்டங்களை மீறி செயல்பட்டதாக பேடிஎம் மீது நடவடிக்கை எடுத்துள்ள கூகிள் தனது ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் அப்ளிகேசனை தற்காலிகமாக நீக்கியது. சூதாட்டம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டதால் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இது பேடிஎம் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் பேடிஎம் நிறுவனத்தின் மற்ற ஆப்களான பேடிஎம் மால், பேடிஎம் மியூச்சுவல் பண்ட் போன்ற அப்ளிகேசன்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் அப்ளிகேசன் நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கூகுள் பிளேயில் பேடிஎம் சேர்க்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பண பரிவர்த்தனை செய்யும் மக்கள்  நிம்மதி அடைந்தனர்.

உங்களின் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. கூகுள் பிளே ஸ்டோரில் பேடிஎம் மீண்டும் சேர்க்கபட்டுள்ளது என்று பேடிஎம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் ஷேகர் ஷர்மா தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.