பெரு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தற்காலிகமாக தடை செய்யும் மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்


பெரு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தற்காலிகமாக தடை செய்யும் மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 19 Sept 2020 3:35 PM IST (Updated: 19 Sept 2020 3:35 PM IST)
t-max-icont-min-icon

பெரு நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை தற்காலிகமாக தடை செய்யும் நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி,

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ள பெரு நிறுவனங்களின் மீது, திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா தற்காலிகமாக தடை செய்கிறது. கொரோனா பரவல் மற்றும் பொது முடக்கத்தால் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மசோதா மீதான விவாதத்தில், மசோதாவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்தது. விவாதத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது.

Next Story